/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 29-11-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 29-11-2024 | Short News Round Up | Dinamalar
பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடி, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பார்லிமென்டை முடக்க முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை துளி அளவு கூட எதிர்க்கட்சிகள் மதிக்கவில்லை. முதல் நாள் கூட்டம் துவங்கியதில் இருந்தே அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேச வன்முறைகள் குறித்து விவாதிக்கக்கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 நாள்களாக லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் முடங்கியது. தொடர்ந்து 3 நாளாக எந்த மசோதாவும் தாக்கல் செய்ய முடியாமல் அலுவல் நேரம் முடங்கி உள்ளது.
நவ 29, 2024