உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 06-12-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 06-12-2024 | Short News Round Up | Dinamalar

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மலைமேடு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில் திருவேதி, மோகனரங்கன் ஆகியோர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகராட்சி விநியோகம் செய்த குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகவும், அதை குடித்ததால் தான் அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட பாஜ தலைவர் வேதசுப்ரமணியம் தலைமையில் பாஜவினர் பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை