உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 11-12-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 11-12-2024 | Short News Round Up | Dinamalar

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 11, 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை நோக்கி வரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை