செய்தி சுருக்கம் | 08 PM | 14-12-2024 | Short News Round Up | Dinamalar
இந்திய அரசியலமைப்பு சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவதை முன்னிட்டு பார்லிமென்டில் அரசியலமைப்பு சாசனம் தொடர்பான சிறப்பு விவாதம் 2 நாட்களாக நடந்தது. 2வது நாள் கடைசியில் பிரதமர் மோடி பேசினார். நாட்டின் சுதந்திரத்திற்கு பின் நம் அரசியல் சாசனம் தான் நம்மை இங்கு வரை அழைத்து வந்துள்ளது. அரசியல் சாசனத்தை வகுத்தளித்த நம் முன்னோர்களுக்கு கோடி கோடி வணக்கங்கள். அரசியல் சாசனத்தால் தான் என்னை போன்ற சாமானியனும் இங்கு வர முடிந்துள்ளது பழங்குடியினப் பெண் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதே நம் அரசியல் சாசனம் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையை போற்றுவதே அம்பேத்கருக்கு செய்யும் உண்மையான மரியாதை. இந்தியா ஒரே நாடு என்பதை வலியுறுத்தவே 370வது பிரிவு நீக்கப்பட்டது. அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்த நேரத்தில் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அரசியல் சாசனம் குழி தோண்டி புதைக்கப்பட்டு நாடே சிறையாக மாற்றப்பட்டது. காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பம் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டது. அரசியல் சாசனத்தை இயற்றியவர்களுக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தினர் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இருந்து எமெர்ஜென்சியின் கறையை ஒருபோதும் துடைக்க முடியாது என மோடி கூறினார்.