உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 21-12-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 21-12-2024 | Short News Round Up | Dinamalar

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்துக்கு அரசு அனுமதி அளித்தது. இதை கண்டித்து பாஜ மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் கறுப்பு தின பேரணி எனும் பெயரில் கண்டன கூட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து கறுப்பு தின பேரணி துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காந்திபுரம் கிராஸ்கட் சாலை வழியாக சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் வழியே பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் பேரணி தொடங்கியவுடன் காந்திபுரம் அருகே அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி பேரணி நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வானதி, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ