செய்தி சுருக்கம் | 08 AM | 22-12-2024 | Short News Round Up | Dinamalar
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, ஆந்திரா கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகாலையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனி மூட்டம் காணப்படும். நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, சேலம் மாவட்டம் சந்தியூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம், கொடுமுடியாறு, ஊத்து, திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.