/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 22-12-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 22-12-2024 | Short News Round Up | Dinamalar
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக மேற்காசிய நாடான குவைத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய தொழிலாளர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். நம் விவசாயிகள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள், நமது தொழிலாளர்கள் வயல்களில் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்று நான் நாள் முழுவதும் நினைத்து கொண்டிருக்கிறேன். இவர்கள் 10 மணி நேரம் உழைத்தால், நான் 11 மணி நேரம் உழைக்க வேண்டும் என நினைக்கிறேன். நானும் எனது குடும்பத்துக்காக உழைக்கிறேன். எனது குடும்பத்தில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என மோடி கூறினார்.
டிச 22, 2024