செய்தி சுருக்கம் | 08 PM | 25-12-2024 | Short News Round Up | Dinamalar
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் 2ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். 21ம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அந்த வந்த மர்மநபர் ஒருவர், ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினார். பின்னர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். வீடியோ எடுத்து மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவி பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இவர் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. கடந்த 21ம் தேதி இரவு பிரியாணி விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.