/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் 4 மணி | 04-01-2025 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் 4 மணி | 04-01-2025 | District News | Dinamalar
நீலகிரி மாவட்டத்தில் மழை தாக்கம் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் அனைத்து மலை ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை மழையின் தாக்கம் குறைந்து கடும் மேகமூட்டம் நிலவியது. அதை தொடர்ந்து இன்று முதல் வழக்கம் போல் மலை ரயில் இயக்கம் மீண்டும் துவங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.
ஜன 04, 2025