மாவட்ட செய்திகள் | 04-01 -2025 | District News | Dinamalar
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அமிர்தவர்ஷினி நடன நாட்டிய இசைப்பள்ளி சார்பில், சலங்கை அணியும் விழா நடைபெற்றது. திண்டுக்கல், தேனி லயன் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமணி தலைமை வகித்தார். சென்னை அரசு கல்லூரி நாதஸ்வர உதவி பேராசிரியர் வீரமணிகண்டராஜன், வக்கீல் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசை நடனப்பள்ளி தாளாளர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். மாணவிகள் கிருஷ்ணவர்ஷா, தியா ஸ்ரீ நாச்சியார், கிருத்திகா, சஷ்டிகா, அக்சராஸ்ரீ, பிரகல்யா பாண்டி, திவ்யதர்ஷினி ஆகியோரின் வரவேற்பு நடனம், கதைய உரையாடல் நடனம், ராமர் பட்டாபிஷேகம் நடன அரங்கேற்றம் நடந்தது. நாட்டிய குரு வேல்மணி நன்றி கூறினார்.
ஜன 04, 2025