செய்தி சுருக்கம் | 08 PM | 25-02-2025 | Short News Round Up | Dinamalar
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி பார்த்தால், கடந்த காலங்களில் குடும்ப கட்டுப்பாட்டை தீவிரமாக செயல்படுத்திய தென் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்தின் லோக்சபா எண்ணிக்கை குறையும். இதனால் பார்லிமென்ட்டில் தமிழர்களின் குரல் நசுக்கப்படும். எனவே தொகுதி மறுவரையறை, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க, மார்ச் 5ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடக்கும். அதில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறினார்.