/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 07-03-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 07-03-2025 | Short News Round Up | Dinamalar
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள், முக்கிய கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. மக்கள்தொகை பெருக்கத்தை திறம்பட கட்டுப்படுத்தியதற்காகவும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலை நிறுத்தியதற்காகவும் நம்மை போன்ற மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக்கூடாது. பார்லிமென்டில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும்.
மார் 07, 2025