/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 29-06-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 29-06-2024 | Short News Round Up | Dinamalar
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் வீடுகள், விவசாயத் தோட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் பொருட்கள் அனைத்தும் சேதமானது. அங்கிருந்த மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சாலையை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டனர். கூடலூர் செல்லும் சாலையில் அத்திமாநகர் என்ற இடத்தில், மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
ஜூன் 29, 2024