உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 02-07-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 02-07-2024 | Short News Round Up | Dinamalar

பதினெட்டாவது லோக்சபாவின் முதல் கூட்டம் ஜூன் 24ல் தொடங்கியது. ஜூன் 27-ல் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் தனது முதல் உரையை ஆற்றினார். நீட், அக்னிவீர் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முதலான பல பிரச்னைகளை அவர் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பிரதமர் மோடி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். இந்துக்கள் குறித்து அவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை