செய்தி சுருக்கம் | 01 PM | 04-07-2024 | Short News Round Up | Dinamalar
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியானார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற ஐகோா்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டும் விசாரணை நடக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் செயல்படாத ஒரு பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து, மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்திருப்பதாக மாதேஷ் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெட்ரோல் பங்கில் அதிரடி சோதனை நடத்தினர். தரையில் புதைத்து வைத்திருந்த பெட்ரோல் டேங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.