செய்தி சுருக்கம் | 08 AM | 09-07-2024 | Short News Round Up | Dinamalar
ரஷ்யாவுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி இன்று தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார். மோடியை பார்க்க இந்தியர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இதையடுத்து, இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பேசுகின்றனர். அப்போது வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து மோடியும், புதினும் ஆலோசிக்க உள்ளனர். பின்னர் தலைவர்களின் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா செல்கிறார்.