செய்தி சுருக்கம் | 08 AM | 29-07-2024 | Short News Round Up | Dinamalar
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை தனது வெற்றிக்கான காரணத்தை வெளிப்படுத்தி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகரித்தது. பகவத் கீதை படித்தேன். அதன்படி நடக்க முயற்சித்தேன். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே, மனிதர்களால் விதியைக் கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்துகொண்டேன். அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். பகவான் கிருஷ்ணர் அர்ஜூனரிடம் இலக்கில் மட்டும் கவனம் செலுத்து என்று சொல்வார். அது மட்டும்தான் என் மனதில் இருந்தது. இதனால்தான் என்னால் சாதிக்க முடிந்தது. பதக்கம் வென்ற மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. என்னுடைய வெற்றியை தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன் என மனு பாக்கர் கூறினார்.