உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01PM | 14-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01PM | 14-08-2024 | Short News Round Up | Dinamalar

பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஜலாலுதீன் கான். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டின் மேல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தார். அவர்கள், 2022ல் பிரதமர் மோடி உத்தர பிரதேசம் வரும்போது அவருக்கு இடையூறு செய்யும் நோக்கில் சதி ஆலோசனை நடத்தியதாக பீகார் போலீசார் கண்டறிந்தனர். இந்த சதியில் ஜலாலுதீனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுக்கும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட், பீகார் ஐகோர்ட் நிராகரித்ததை தொடர்ந்து, ஜலாலுதீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, ஜலாலுதீனுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணையின்போது அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி