உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 26-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 26-08-2024 | Short News Round Up | Dinamalar

சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஏர் அரேபியா விமானம் கோவை ஏர்போர்ட்டுக்கு வந்தது. இந்த விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளையும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். பின்னர் விமானத்தின் உட்பகுதியிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விமான இருக்கை ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. பரிசோதனையில் அவை, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1399 கிராம் எடை தங்க கட்டிகள் என்பது தெரிந்தது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை