உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 12-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 12-09-2024 | Short News Round Up | Dinamalar

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் விசாகா பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ப்ரிட்ஜுக்கு அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த 5 பெண்கள் காயம் அடைந்த நிலையில் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்களான பரிமளா மற்றும் சரண்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பிற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் கரும்புகை காரணமாக மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஒரு மணி நேரம் போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை