செய்தி சுருக்கம் | 01 PM | 12-09-2024 | Short News Round Up | Dinamalar
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டாரபாளைம் பகுதியில் உள்ள விசாகா என்ற பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்து சிதறியது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பள்ளி ஆசிரியர்கள் பரிமளம், சரண்யா ஆகியோர் பலியானார்கள். தீக்காயம் அடைந்த 3 பேர் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திடீர் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த விடுதியை காலி செய்யக்கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விடுதியை நடத்தி வந்தது தெரியவந்தது.