உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 23-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 23-09-2024 | Short News Round Up | Dinamalar

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர் ஆவார். சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவற்காக நீலாங்கரைக்கு அழைத்து சென்றனர். அக்கரை பக்கிங்காம் கால்வாய் அருகே சென்றபோது, போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டுகள் போலீஸ் வாகனத்தை துளைத்தன. வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விமல், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜாவின் மார்பு, மேல்வயிறு பகுதியை குண்டுகள் பாய்ந்தன. இதில் சீசிங் ராஜா ஸ்பாட்டிலேயே பலியானார்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !