செய்தி சுருக்கம் | 08 PM | 25-09-2024 | Short News Round Up | Dinamalar
ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 1ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சோனிபட் நகரில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாஜ ஆட்சியில் விவசாயத்தில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு பாஜ கொண்டு செல்கிறது. 10 ஆண்டு பாஜ ஆட்சியில், இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஊழல், வாரிசு அரசியலில் இருந்து விடுபட்ட பின்னர் இந்தியா முன்னேறி வருகிறது. வெளி நாடுகளை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றன. அவை கிடைக்க பெறும்போது, விவசாயிகள் இளைஞர்கள் பயனடைவார்கள். ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜவை வெற்றிபெற செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டனர். காங்கிரசுக்கு ஓட்டு அளிப்பது ஹரியானவின் ஸ்திரதன்மை, வளர்ச்சியை பணயம் வைப்பதற்கு சமம். தவறுதலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மாநிலத்தையே அழித்துவிடும். இந்திய ஆட்சி அமைப்பில் ஊழலை உருவாக்கி வளர்த்தது காங்கிரஸ். 10 ஆண்டுகளாக ஹரியானாவை காங்கிரஸ் அரசு கொள்ளையடித்தது. விவசாயிகளின் நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆட்சி அதிகாரத்திற்கு வராதபடி, காங்கிரசை வெகுதூரத்தில் நீங்கள் தள்ளி வைக்க வேண்டும்.