உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 04-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 04-10-2024 | Short News Round Up | Dinamalar

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12:20 மணிக்கு புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது இன்ஜினில் உள்ள டர்பு வால்வு திடீரனெ தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த இன்ஜின் பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தி தீயணைப்பானை வைத்து தீயை அனைத்தார். இதையடுத்து ரயில் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காரைக்குடியில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து நள்ளிரவு 02.02 மணிக்கு ரயில் மீண்டும் புறப்பட்டது. ஒரு மணி நேரம் 42 நிமிடம் நார்த்தாமலையில் ரயில் நின்றதால் மறுமுனையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு சேது எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி