உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 05-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 05-10-2024 | Short News Round Up | Dinamalar

ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இன்று மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. முதல்வர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். தொடர்ந்து 3ஆவது முறை ஆட்சியை பிடிப்பதில் பாஜவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை