உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 12-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 12-10-2024 | Short News Round Up | Dinamalar

நேற்றிரவு மைசூரில் இருந்து வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே, நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலின் பெட்டி உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகளில் தீ பிடித்தது. எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 1,650 பயணிகள் இருந்துள்ளனர். உள்ளூர் மக்கள் முதல்கட்டமாக பயணிகளை மீட்க ஆரம்பித்தனர். ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்கள், பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்பு பணியில் இணைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி