செய்தி சுருக்கம் | 08 PM | 21-10-2024 | Short News Round Up | Dinamalar
வடக்கு அந்தமான் கடலை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுப்பெறக்கூடும் என்று ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை 5:30 மணிக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது பற்றி இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்: புயல் சின்னம் காலை 11:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அப்படியே மேற்கு வடமேற்கு திசையில் நகரும். செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதன்கிழமை புயலாக தீவிரம் அடையும். பின்னர் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். வியாழக்கிழமை காலை ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கடற்கரை பகுதியை நெருங்கும்.