உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 29-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 29-10-2024 | Short News Round Up | Dinamalar

2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி செய்தார். கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் புடினையும், ஆகஸ்ட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 22, 23ம் தேதி ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து உக்ரைன் போர் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என புடினுக்கு மோடி உறுதி அளித்தார். இதையடுத்து ஆங்கில செய்தி சேனலில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவின் உதவி கேட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி