செய்தி சுருக்கம் | 08 AM | 26-11-2024 | Short News Round Up | Dinamalar
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று முதலே நாகை மாவட்டத்தில் நாகூர், வாஞ்சூர், வடகுடி, பனங்குடி, புத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் அறிவித்தார். மயிலாடுதுறை, திருவாரூர், மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முறையே கலெக்டர்கள் மாகாபாரதி, சாருஸ்ரீ உத்தரவிட்டனர். அதேபோல, புதுச்சேரி காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.