உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 01-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 01-02-2025 | Short News Round Up | Dinamalar

பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். புதிய வருமான வரி குறித்த சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். வரி செலுத்துபவர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது. 1961 முதல் உள்ள வருமான வரி சட்டம் மாற்றப்படுகிறது. அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும். வருமான வரி பிடித்தம் எளிதாக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரி பிடித்தம் கிடையாது. மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரி செலுத்தும் 90 லட்சம் பேர், தங்களின் தகவல்களை திருத்தி சரியான தகவல்களை பகிர்ந்துள்ளனர். வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. TDS மற்றும் TCS வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்படும். வீட்டு வாடகைக்கான TDS வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. மாத வருமானம் ஒரு லட்சம் வரை பெறுபவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. 7 லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரி உச்ச வரம்பை ரூ.12 லட்சமாக மத்திய நிதி அமைச்சர் உயர்த்தி அறிவித்தார்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி