உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 19-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 19-09-2024 | Short News Round Up | Dinamalar

ஸ்ரீநகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில் நேற்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வரலாறு காணாத வகையில் பெருவாரியான மக்கள் ஓட்டளித்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். கிஷ்துவாரில், 80 சதவீதம்; தோடா, ராம்பனில் தலா 70 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க 3 குடும்பங்கள் உள்ளன. இவர்களை கேள்வி கேட்க யாருமே இல்லை என நினைக்கின்றனர். எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும். பின் மக்களை சுரண்ட வேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் அராஜகத்தை மட்டுமே இந்த 3 குடும்பங்கள் அரங்கேற்றியுள்ளன. இவர்களால் இங்குள்ள மக்களுக்கு எந்த நன்மையும் விளைந்ததில்லை. காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட்டன. காஷ்மீர் இளைஞர்களை அவர்கள் படிக்கவிடவில்லை. காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி ஆகிய மூன்று கட்சிகளும் இங்குள்ள மக்களுக்காக எதையும் செய்ததில்லை. மூன்று குடும்பங்களின் ஆட்சியால் காஷ்மீரில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட்டுகளை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தனர். 2019க்கு பிறகு காஷ்மீரில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று காஷ்மீர இளைஞர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்கின்றனர். புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ், ஐஐஎம், என மாபெரும் கல்வி மையங்கள் இங்கு செயல்படுகின்றன. பயங்கராவதத்துக்கு துணை போகும் எவரையும் விடமாட்டேன். காஷ்மீரை சீரழித்தவர்களின் கனவு இனி பலிக்காது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுப்பதும், அமைதியை நிலைநிறுத்துவதும் தான் மோடியின் வாக்குறுதியாக உள்ளது. இது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல என் லட்சியமும் இது தான் என பிரதமர் மோடி கூறினார்.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ