உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 20-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 20-09-2024 | Short News Round Up | Dinamalar

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1715 ஆம் ஆண்டு முதல் ஏழுமலையானுக்கு லட்டு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. ஆனால் 1803 ஆம் ஆண்டு முதல் தான் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. முதலில் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்ட நிலையில் 1940 ஆம் ஆண்டு முதல் பூந்தி லட்டாக மாற்றப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருப்பதியில் நாள்தோறும் பிரசாத 3.5 லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு 10 டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ காய்ந்த திராட்சை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டு பிரசாதத்தின் மூலம் மட்டும் ஆண்டு தோறும் சுமார் 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கர்நாடகா பால் கூட்டமைப்பான நந்தினி நிறுவனத்திடம் இருந்துதான் நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கர்நாடகா பால் கூட்டமைப்பான நந்தினி நிறுவனத்திடம் இருந்து தான் நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நந்தினி நிறுவனம் லட்டு தயாரிப்பதற்கான நெய்யை விநியோகம் செய்தது. ஒரு கிலோ நந்தினி நெய் 470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பால் விலை உயர்வால் நெய்யின் விலையை குறைக்க நந்தினி நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் கடந்தாண்டு வேறொரு நிறுவனத்திற்கு 320 ரூபாய்க்கு நெய் கொள்முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. குறைந்த விலை நெய் தரத்திலும் குறைவாகவே இருக்கும் என கடந்தாண்டே சர்ச்சை கிளம்பியது. தற்போது அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக புகார் வெடித்து பூதாகரமாகி உள்ளது. இந்நிலையில் கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. லட்டு விவகாரத்தில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக மக்கள் கூறுகின்றனர். மன்னிக்க முடியாத தவறுகள் நடந்தால் அவர்களை நான் காப்பாற்ற வேண்டுமா? தற்போது நெய் விநியோகிப்பாளரை மாற்றிவிட்டோம். இப்போது கர்நாடகாவில் உள்ள நந்தினி பிராண்டு நெய்யை வாங்க தொடங்கி உள்ளோம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !