உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 29-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 29-09-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai துணை முதல்வர் பதவியல்ல பொறுப்பு ; உதயநிதி ட்வீட் விளையாட்டு அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக இன்று மாலை பதவியேற்க உள்ளார். இதுகுறித்து உதயநிதி தெரிவித்திருப்பதாவது: நம் பெருமைமிகு தமிழகத்தின் துணை முதல்வராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு. என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஏற்றத்துக்காக, ஈ.வெ.ரா - அண்ணாதுரை - கருணாநிதி வகுத்து தந்த பாதையில், முதல்வர் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும் என உதயநிதி தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா முடா நில ஒதுக்கீடு ஊழல் புகாரில் சிக்கி இருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய, கவர்னர் தவார் சந்த் கெலாட் சமீபத்தில் அனுமதி அளித்தார். அதை எதிர்த்து சித்தராமையா ஐகோர்ட் சென்ற நிலையில், கவர்னரிடம் உத்தரவுக்கு கோர்ட் தடை விதிக்க மறுத்துவிட்டது. கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக ராகுலும் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஆனால், கர்நாடக காங்கிரஸ் சித்தராமையாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. துணை முதல்வர் சிவகுமாருக்கு முதல்வர் பதவி மீது ஆசை; ஆனால், கட்சியோ சித்தராமையாவை முதல்வராக்கி விட்டது. இருப்பினும், கட்சி தலைமை சொல்படி சித்தராமையாவை ஆதரித்து வருகிறார் சிவகுமார். இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தை பிரதமர் மோடி பெரிதுபடுத்தி வருகிறார். ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையா விவகாரத்தை எடுத்து சொல்லி, காங்கிரஸ் என்றாலே ஊழல். காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என பேசி வருகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது. சித்தராமையா மீது இப்போது நடவடிக்கை எடுத்தால், ஹரியானா, காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால், கட்சி தலைமை பொறுமையோடு உள்ளதாம். அக்டோபர் 8ல் தேர்தல் முடிவுகள் வெளியான பின், சித்தராமையா மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. சித்தராமையாவை எதிர்த்து இருப்பவர், துணை முதல்வர் சிவகுமார். முதல்வரின் மனைவி குறித்த அனைத்து ஆவணங்களையும் பா.ஜவிடம் கொடுத்ததே சிவகுமார் தான் எனவும் பேசப்படுகிறது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி