உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 02-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 02-10-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் துாவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். துாய்மை இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவையொட்டி, டில்லி நவயுகா பள்ளி மாணவர்களுடன் பன்டாரா பார்க்கை சுத்தம் செய்தார். அப்போது துாய்மையின் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்களும் மோடியிடம் கலந்துரையாடினர். அவரிடம் கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை தெரிந்து கொண்டனர். பின், அமைச்சர்கள், அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் துாய்மை இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசினார். துாய்மை இந்தியா திட்டத்தால், நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன் துாய்மை பணியாளர்களை மக்கள் எப்படி பார்த்தனர். அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஆனால் இன்று, நாம் அனைவரும் துாய்மை பணியில் ஈடுபடும் நிலையில், அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்கிறது. நாமும் நாட்டை சுத்தம் செய்யும் உயர்ந்த பணியில் ஈடுபடுகிறோம் என்ற உணர்வு பிறந்துள்ளது. துாய்மை பணியாளர்கள் பற்றிய சிந்தனை மாறியுள்ளது. அவர்களின் மனதிலும் மிகப் பெரிய புத்துணர்ச்சியும், உத்வேகமும் பிறந்துள்ளது. லட்சக்கணக்கான துாய்மை பணியாளர்களை இந்த அரசு கவுரப்படுத்தியுள்ளது. செப்டிக் டேங்குகளை மனிதர்கள் சுத்தம் செய்வதை முற்றிலும் தடை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துாய்மையை வலியுறுத்தி இந்த அரசு எடுத்த முயற்சிகள், நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும். திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுகாதாரம் கருதி, பல கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். ---- இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகள் முதல் தலைவர் ஹசன் நசரல்லா வரை ராக்கெட் ஏவி போட்டு தள்ளியது இஸ்ரேல். ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெருக்கமாக உள்ளவர்களையும் இலக்கு வைத்து தாக்கி வருகிறது. குறிப்பாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகள் குண்டு வீசி தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான். ஏவுகணை கட்டமைப்பில் சற்று முன்னேறிய நாடு ஈரான்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி