உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 03-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 03-11-2024 | Short News Round Up | Dinamalar

அதிமுக மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்த கட்சி. இந்த கட்சியை விஜய் எப்படி விமர்சிக்க முடியும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். திராவிடம், தமிழ் தேசியம் பற்றி விஜய் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார். அவரது விமர்சனத்துக்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூனில் கனடாவில் கொல்லப்பட்டார். அப்போது முதல் இந்தியாவுக்கும் நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார். கனடா அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் மத்திய அமைச்சர் அமித் ஷா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார் என கூறினார். ஆனால் அதற்கான ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை. இது உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அடிப்படை ஆதாரம் இல்லாத அபத்தமான குற்றச்சாட்டு என இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கனடா தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளார். கனடா உயரதிகாரிகளே தவறான தகவல்களை ஊடகங்களில் கசியவிட்டுள்ளனர்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ