உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 05-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 05-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர், டிச., 6ல் ஒன்றாக கைகோர்த்தால், தங்கள் கட்சி இரண்டாக உடைக்கப்படலாம் என்ற அச்சம் வி.சி., நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. திருமாவளவனின் 60வது பிறந்த நாள் கொடிக்கம்பம் அமைத்தல், மது ஒழிப்பு மாநாடு, ஆட்சியில் பங்கு கோஷம், துணை முதல்வர் பதவி என திமுக கூட்டணிக்கு தொடர் நெருக்கடிகள் அளிக்கிறது. 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன், ஏன் துணை முதல்வராகக்கூடாது? என, வி.சி துணை பொதுச் செயலர்களான ஆதவ் அர்ஜுனா, வன்னியரசு ஆகியோர் கேள்வி எழுப்பினர். வி.சி -எம்.பி ரவிகுமார், எம்.எல்.ஏக்கள் சிந்தனைசெல்வன், ஆளூர் ஷா நவாஸ் போன்றோர், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதுடன், திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதற்கிடையே த.வெ.க மாநாடு நடந்து முடிந்ததும், அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை, தன் முதல் மாநாட்டில் பேசிய விஜய்க்கு பாராட்டு தெரிவித்தார். அதேநேரம் விஜயின் மாநாட்டு பேச்சுக்கு எதிராக, ரவிக்குமார், வன்னியரசு, ஆளூர் ஷா நவாஸ் போன்றோர் கொந்தளித்து பேசினர். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என வெளிப்படையாக பேசி, திமுக கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாக திருமாவளவனும் விஜயை விமர்சித்தார். ஆனால், ஆதவ் அர்ஜுனா கருத்தை ஆதரித்து வி.சி., தொண்டர்கள் பேசியுள்ளனர். நாம் கட்சி துவக்கியதே ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற எண்ணத்தோடுதான். அந்த கொள்கையை எதிர்த்து பேசினால், புதுமுகங்கள் எப்போது எம்.பி., எம்.எல்.ஏ., பதவி பெறுவது என திருமாவளவனிடம் கொந்தளித்துள்ளனர். எந்தக் கூட்டணியில் வி.சிக்கள் இருந்தாலும், ஆட்சியில் பங்கு கோஷம் முன் வைக்கப்படும். அதை ஏற்றுக்கொள்வோருடன் தான் கூட்டணி; அதில் மாறுபாடு எதுவும் இருக்காது என்று சொல்லி, தொண்டர்களை சமாளித்தாராம் திருமாவளவன். இந்த சூழலில் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், டிசம்பர் 6ல், ஆதவ் அர்ஜுனா தொகுத்து தயாரித்திருக்கும் நுால் வெளியீட்டு விழாவில், விஜய் உடன் பங்கேற்க, திருமாவளவன் சம்மதித்துள்ளாராம். இந்த தகவல், திமுக தரப்பை கலவரப்படுத்தி உள்ளது. வலுவாக இருக்கும் இண்டி கூட்டணியை பலவீனப்படுத்துவதாக, திருமாவளவன் மீது தி.மு.க தலைவர்களும், தொண்டர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். நுால் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க, திருமாவளவனுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதையும் தாண்டி நடிகர் விஜயும், திருமாவளவனும் விழாவில் கலந்து கொண்டால், ஜனவரி மாதத்திற்குள் வி.சி கட்சி உடையும் என தெரிகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் கூறியதாவது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்கு, பைக்கில் ஹெல்மெட் அணிந்து, வி.சி முக்கிய தலைவரும், த.வெ.க முக்கிய தலைவரும் சென்றுள்ளனர். அங்கு இருவரும் சந்தித்து, பல மணி நேரம், தமிழக, தேசிய அரசியல் கள நிலவரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். எதிர்காலத்தில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவது குறித்தும், அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளனர். இந்த தகவல் உளவுத்துறை மூலம் திமுக மேலிடத்திற்கு தெரிய வந்ததும், ஜனவரிக்குள் வி.சி கட்சியை உடைக்க ஆலோசனை நடந்துள்ளது. தற்போது அக்கட்சியில் 2 எம்.பி.,க்கள், 4 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தி.மு.க ஆதரவாக உள்ள ஒரு எம்.பி.,யும், 2 எம்.எல்.ஏ.,க்களும் வெளியே வந்தால், அவர்களின் பதவிகள் பறிபோக வாய்ப்பு இல்லை. அதனால், எம்.எல்.ஏ.,க்களையும், மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.கவில் இணைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அப்படியொரு விஷயம் நடந்தால், அது வி.சி கட்சிக்கு மக்கள் மத்தியில் மேலும் பலம் சேர்க்கும். தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய வலுவான பாய்ன்டாகவும் இருக்கும். அதனால், அப்படியொரு உடைப்பை கட்சினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை