உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 05-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 05-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட் வரும் 10ம் தேதி ஓய்வு பெறுகிறார். சமீபத்தில் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், அயோத்தி வழக்கில் நல்ல தீர்ப்பு சொல் என கடவுளிடம் வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி சட்டத்தின் துணையோடு நேர்மையான தீர்ப்பை வழங்கியதாகவும் கூறியிருந்தார். இதற்கு பகுத்தறிவுவாதிகள் தரப்பில் விமர்சனம் எழுந்தது. அயோத்தி தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வரவில்லையா.. எல்லாமே உங்கள் கடவுளிடம் கேட்டுத்தான் தீர்ப்பாக வாசிக்கிறீர்களா?” என்று கிண்டல் கேலி செய்தனர். இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த சந்திரசூட் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். சோஷியல் மீடியா வந்த பிறகு யாரும் யாரையும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்று ஒரு சூழல் உருவாகி விட்டது. எல்லா தீர்ப்புமே சட்டம் என்ன சொல்கிரது, அரசியல் சாசனம் என்ன வழிகாட்டுகிறது என்பதை பொருத்து தான் எழுதப்படுகிறது. ரொம்ப சிக்கலான வழக்கில் மனம் அலைபாயுமே, பதற்றம் உண்டாகுமே, நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று என் கிராமத்து மக்கள் என்னை கேட்டார்கள். அதற்கு பதில் சொல்லும்போது அப்படி பேசினேன். மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே, சரியான முடிவை எடுக்க முடியும். அந்த அமைதிக்காக ஆண்டவனை வேண்டுவது என் பழக்கம், என் வளர்ப்பு. அந்த வகையில், ஆண்டவனே நீதான் வழிகாட்ட வேண்டும், நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று முறையிட்டேன். கஷ்டம் வரும்போது, அதில் இருந்து வெளியே வர கடவுளிடம் உதவி கேட்பது எல்லோரும் தினமும் செய்யும் வேலை. மதங்கள் வேறு வேறாக இருந்தாலும், இந்த மரபு நமது மண்ணுக்கு பொதுவானது. நான் இந்துவாக இருப்பதால், இந்து கடவுளை கும்பிடுவதால், அவரிடம் வேண்டினேன். எந்த கடவுளாக இருந்தாலும், நல்ல வழியை காட்டுவாரே தவிர, வேறு மதத்துக்கு எதிரான வழியை காட்ட மாட்டார். அதுபோன்ற சிந்தனையே அபத்தமானது. மதம் என்பது மனிதனுடையது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். அவரை எந்த வட்டத்துக்குள்ளும் அடக்க முடியாது என்றும் நீண்ட விளக்கம் அளித்தார் சந்திரசூட்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !