உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 06-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 06-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டு பதிவு செவ்வாயன்று மாலை தொடங்கியது. ஓட்டுபதிவு முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பொதுமக்களின் ஓட்டுகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர். இதனால் மொத்தமுள்ள 538 தேர்வாளர் இடங்களில் 270 இடங்களை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். காலை 7 மணி நிலவரப்படி டிரம்ப் 101 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். கமலா ஹாரிஸ் 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க ஏழு மாகாணங்கள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன. அவை அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகும். இந்த 7 மாகாணங்களில் மட்டும் 93 தேர்வாளர் குழு இடங்கள் உள்ளன. சில மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் இடையிலான ஓட்டு சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர் வரும் ஜனவரி 20ல் பதவி ஏற்பார். இது அமெரிக்க வரலாற்றில் நடைபெற இருக்கும் 60வது அதிபர் பதவியேற்பு விழாவாகும்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை