செய்தி சுருக்கம் | 08 AM | 10-11-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai கள ஆய்வு, திட்ட பணி துவக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் 2நாள் பயணமாக விருந்துநகர் வந்துள்ளார். நேற்று தனியார் பட்டாசு தொழிற்சாலையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். காப்பகத்தில் உள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடினார். முன்னதாக தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்காக அவரே பேக்கரி சென்று கேக் வாங்கி வந்து மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அங்கிருந்த சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அய்யரம்மாள், முதல்வர் நம்மை அவருடைய குழந்தைகளாக நினைத்து இனிப்புகள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இதனை நாம் வார்த்தைகளால் சொல்லவே முடியாது என பேசினார். முதல்வர் ஸ்டாலினை அப்பா என அழைத்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் அப்பா நிறைவான நாள் என குறிப்பிட்டுள்ளார்.