உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 10-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 10-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai சென்னையில் சில தினங்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானாவிலும் கண்டனங்கள் குவிந்தது. தமிழக பாஜவும் கஸ்தூரி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். மன்னிப்பும் கோரினார். எனினும் அகில இந்திய தெலுங்கு சம்மேள அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து இரு பிரிவினர் இடையே கலகத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளில் கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். சென்னை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் கஸ்தூரி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளில் கஸ்தூரியை நேரில் விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்தனர். சம்மன் வழங்க போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை. அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. செல்போன் எண்ணை போலீசார் தொடர்புகொண்ட போது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டினர். மேலும் நடிகை கஸ்தூரி போலீசார் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை