உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 14-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 14-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததால், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. அதே நேரம் மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சுழற்சி நிலவுவதால், 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான வானிலை மைய அறிக்கை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது. ஆனால் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்னொரு பக்கம் கேரள கடலோரப் பகுதிளை ஒட்டி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 19ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை. சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். சென்னையில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ