செய்தி சுருக்கம் | 01 PM | 14-11-2024 | Short News Round Up |
Dinamalar #செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் துறை டாக்டர் பாலாஜியை நேற்று நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தீவிர சிகிச்சையின் பலனாக சற்று உடல் நலம் தேறியுள்ள டாக்டர் பாலாஜியை, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்த வீடியோ வெளியாகி உள்ளது. தானே உணவு சாப்பிடும் அளவுக்கு ஸ்டேபிளாக இருப்பதாக கூறிய டாக்டர், அமைச்சருடன் கைகுலுக்கினார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். டாக்டர் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும் மதியத்திற்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்படுவார் என்றும் தெரிவித்தார். டாக்டரை தாக்கிய விக்னேஷ் மீது கடுமையான 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்களை அடையாளும் காண்பதற்காக கைகளில் அடையாள அட்டை கட்டும் பணி சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி சிவப்பு நிறம் - தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம்- சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம்- சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நீல நிறம் - பொது மருத்துவம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.