செய்தி சுருக்கம் | 01 PM | 22-11-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தவிர்க்க சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மருத்துவமனையில் இது போன்ற குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவதற்கு காரணம் அதிக நுழைவாயில் இருப்பது தான் என்றும் சொன்னார். பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நம் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு ஆழமானது; மிகவும் முக்கியமானது. கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு மகிழ்ச்சியான உரையாடல். விளையாட்டு நமது நாடுகள் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. நமது கலாசார தொடர்புகளை எடுத்துரைக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்.