உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 24-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 24-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் கணிசமான இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த வெற்றி கொண்டாட நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. breath தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மகாராஷ்டிராவில் வளர்ச்சிக்கான வெற்றி கிடைத்து இருக்கிறது. மோசடியாளர்கள், பொய்யர்கள், பிரித்தாளும் சக்திகள், வாரிசு அரசியல் தோற்கடிக்கப்பட்டது. 3வது முறையாக பாஜ தலைமையிலான கூட்டணி வென்றுள்ளது. 50 ஆண்டுகளில் எந்த கட்சியும், கூட்டணியும் இப்படியொரு பெரிய வெற்றியை கண்டதில்லை. இது மகாராஷ்டிரா அரசுக்கு கிடைத்த அங்கீகாரம். நல்ல ஆட்சிக்கு பாஜ மற்றும் என்டிஏ கூட்டணியைதான் மக்கள் நம்புகிறார்கள். வளர்ச்சியைதான் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதைதான் இது காட்டுகிறது. ஜார்கண்ட் வாக்காளர்களுக்கும் நன்றி. அந்த மாநில வளர்ச்சிக்காக கடினமாக உழைப்போம் என மோடி கூறினார். காங்கிரசை பிரதமர் மோடி தாக்கி பேசினார். மகாராஷ்டிராவில் வாக்குகளை பெறுவதற்காகவே வீர் சாவர்க்கரை திட்டுவதை காங்கிரஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏழைகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரை குழுக்களாக பிரிக்க காங்கிரஸ் நினைத்தது. பிரிவினையை விதைக்க நினைத்தவர்கள் நிராகரிக்கப்பட்டனர். சிலரை திருப்தி படுத்துவதற்காகவே காங்கிரஸ் குறிப்பிட்ட சட்டங்களை உருவாக்கியது. வக்பு வாரியமே அதற்கு உதாரணம். 2014ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், டெல்லியை சுற்றியுள்ள பல சொத்துக்களை வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தது. அம்பேத்கர் தந்த அரசியல் அமைப்பில் வக்பு சட்டத்திற்கு இடமில்லை. ஆனால் குடும்ப அரசியல், ஓட்டு வங்கிக்காக, வக்பு வாரியத்தை காங்கிரஸ் உருவாக்கியது 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் நடக்கிறது. இந்திய அரசியலில் காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி ஆகிவிட்டது. இனி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இருந்தாலும் அதன் ஆவணம் மட்டும் குறையவில்லை. காங்கிரஸ் தனது சொந்த கப்பலை மட்டுமல்ல கூட்டணி கட்சிகளின் கப்பலையும் மூழ்கடிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி