உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 27-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 27-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 27-11-2024 | Short News Round Up | Dinamalar #செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai. ங்ககடலில் உருவான பெங்கால் புயலால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டுகிறது. புயல் தமிழக கடற்கரையை நெருங்கும் முன்பே இலங்கையில் தாண்டவம் ஆடி வருகிறது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்கிறது. யாழ்ப்பாணம், மன்னார் உட்பட வட மாகாண பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்மழை காரணமாக இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரைத்தீவு அருகே பள்ளி மாணவர்கள் சென்ற டிராக்டர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 8 பேரை காணவில்லை. பதுல்லா பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி