அக்டோபர் 12ம் தேதி திருத்தேரோட்டம் | Temple Festival | Gunaseelam | Trichy
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் உள்ளது பிரசன்ன வேங்கடாஜலபதி கோயில். இங்குள்ள பெருமாள் சங்கு சக்கரதாரியாய் எழுந்தருளியுள்ளார். திருமாலின் திருமார்பில் லட்சுமி அம்பாள் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரத முறைப்படி வணங்கினால் வினைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. தென் திருப்பதி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்தில் கருட கொடியானது ஏற்றி தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைக்கிறது. கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.