விறுவிறுப்பான ஆட்டம் | Air Rifle Compatition | Covai
கோவை வடவள்ளியில் உள்ள தி அத்யாயனா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 46வது சகோதாயா ஏர் ரைபிள் போட்டி சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே துவங்கியது. இப்போட்டிகள் வரும் 10ம் தேதி நிறைவடைகிறது. இதன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 14, 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஏர் பிஸ்டல், ஓபன் சைட், பீப் சைட் பிரிவுகளில் வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை பள்ளி இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வீரருக்கு 40 ரவுண்டுகள் சுடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தினமும் 60 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மூன்றாம் நாளில் அதிக புள்ளிகள் பெறும் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அக் 08, 2025