உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / கோவை நேரு திடலில் களைகட்டிய தடகள போட்டி |KSSC |Coimbatore Sahodaya Schools |Athletics Meet

கோவை நேரு திடலில் களைகட்டிய தடகள போட்டி |KSSC |Coimbatore Sahodaya Schools |Athletics Meet

கோவை நேரு திடலில் களைகட்டிய தடகள போட்டி KSSC |Coimbatore Sahodaya Schools |Athletics Meet கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு (கே.எஸ்.எஸ்.சி) சார்பில் நடத்தப்படும் 10-வது ஆண்டு தடகளப் போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 19-ம் தேதி வரை நடைபெறும் இந்த மூன்று நாள் போட்டியில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 32 பள்ளிகளின் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் ஏற்றினார். ஒலிம்பிக் கொடியை டாக்டர் கவிதாசன், செயலாளர், சச்சிதானந்தா கல்லார் ஏற்றினர். கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் கொடியை, பி.ஏ. இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வரும், கேஎஸ்எஸ்சி துணைத் தலைவருமான மகேஷ் நாராயணன் ஏற்றினார். இந்நிகழ்சியை கே.எஸ்.எஸ்.சி. தலைவர் மற்றும் பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளிகளின் முதல்வருமான கிரிஷ் ஈஸ்வரன் தலைமை தாங்கி வழிநடத்தினார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் ஒலிம்பிக் ஜோதி ஏந்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதனிடையே, நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கைலாசவன், ஜான் ஜோசப், அருண் ஆரியன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அசத்தினர். 12 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான நீளம் தாண்டுதலில் தீக்சிதா, சன்விகா, அன்வி சவுகான் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அன்னை ஸ்ருதி, தீபிகா, சஷ்ரிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, விளையாட்டு நற்பண்புகளை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்தப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

ஆக 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை