உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / வெற்றி பெறும் வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர்| Sports | Athletics| Championship| covai

வெற்றி பெறும் வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர்| Sports | Athletics| Championship| covai

வெற்றி பெறும் வீரர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர்| Sports | Athletics| Championship| covai கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் எஸ்.எஸ் குளம் குறுமைய தடகள விளையாட்டு போட்டிகள் துவங்கியது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாரதா, ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி மற்றும் அமரர் ஏ. முத்து கவுண்டர் அரசு பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஓட்டப்பந்தயம் , நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர். விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

ஆக 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை