உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / முதல் 3 இடம் பெறுபவர் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்

முதல் 3 இடம் பெறுபவர் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்

முதல் 3 இடம் பெறுபவர் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர் | Tirupur | South Division Beach Volleyball | Tennikoit Competitions திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காங்கயம் ரோடு வித்ய விகாசினி பள்ளியில் நடந்தது. வட்டார அளவில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் 76 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுபவர், வருவாய் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்பர். இப்போட்டியை சிக்கண்ணா செட்டியார் கல்வி அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் சக்தி சாமுண்டேஸ்வரி, ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் போட்டியை துவக்கி வைத்தனர். தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். நடுவர்களாக முருகன், ஆனந்த், மணிவண்ணன், தமிழ் வாணி, பாலா, கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.

ஜூலை 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !